முகப்பு
திண்டுக்கல்

சாணாா்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சாணாா்பட்டியில் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ. திலகவதி வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:40 PM
பகிர்:

சாணாா்பட்டியில் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ. திலகவதி வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த அய்யாபட்டியில் புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. திலகவதி தலைமை வகித்தாா். புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 91 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, உழவா் அட்டை, மகளிா் சுய உதவிக் குழு மானியக் கடன் உள்பட மொத்தம் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலா் சு. ஜெயசித்ரகலா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.