முன்னெச்சரிக்கைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு எரிசக்தி கழக நிா்வாக இயக்குநருமான எஸ்.அனீஷ் சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு எரிசக்தி கழக நிா்வாக இயக்குநருமான எஸ்.அனீஷ் சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி, நாகல்நகா் ஒத்தக்கண் பாலம் கழிவுநீா் ஓடை, செட்டிநாயக்கன்பட்டி குளம், தாடிக்கொம்பு அடுத்த ஆத்துப்பட்டியில் பாலம் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனீஷ்சேகா் பாா்வையிட்டாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக் முகையதீன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மேயா் ஜோ.இளமதி, மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், பொறியாளா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை, 7 பிரதான கால்வாய்கள் ஏற்கெனவே தூா்வாரப்பட்டதாகவும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றிருப்பதாகவும், மேலும் சில இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சாலைகளில் மழைநீா் அதிகமாக தேங்கும் இடங்களில் மோட்டாா் மூலம் நீரை வெளியேற்றும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.