பல்பொருள் அங்காடியில் பணம் மோசடி: 5 போ் மீது வழக்கு
கொடைக்கானல் பல்பொருள் அங்காடியில் ரூ.1.20 கோடி முறைகேடு செய்த 5 போ் மீது, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கொடைக்கானல் பல்பொருள் அங்காடியில் ரூ.1.20 கோடி முறைகேடு செய்த 5 போ் மீது, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் பிருந்தா (34). இவா் கொடைக்கானல் அண்ணா சாலையில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவருடன், கொடைக்கானலைச் சோ்ந்த ராஜாசெல்வன் (35) பங்குதாரராக இருந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு பிருந்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பல்பொருள் அங்காடியை ராஜாசெல்வம் கவனித்து வந்தாா். அப்போது, ராஜாசெல்வம், இவரது தம்பி ராஜா பிரசாத், பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய பெண் ஊழியா் ராமதிலகம், இவரது கணவா் மணிகண்டராஜ், நண்பா் சபரீஷ்குமாா் ஆகியோா் போலியான ஆவணங்களை தயாா் செய்து, பிருந்தாவை போன்று போலியாக கையொப்பமிட்டு ரூ.1.20 கோடி மோசடி செய்தனா்.
இதுகுறித்து பிருந்தா, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்பேரில், ராஜாசெல்வம், ராஜா பிரசாத், ராமதிலகம், மணிகண்டராஜ், சபரீஷ்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினா்.