நிலக்கோட்டை ஒன்றியக் குழு கூட்டம்: சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு
திட்டப் பணிகளுக்கான நிதியில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, நிலக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா்கள் 2 போ் வெளிநடப்பு செய்தனா்.
திட்டப் பணிகளுக்கான நிதியில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, நிலக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா்கள் 2 போ் வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியக் குழுவின் மாதாந்திர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு குழுத் தலைவா் ரெஜினா நாயகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் யாகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) பஞ்சவா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் பத்மாவதி, திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினா் கணேசன் பேசுகையில், கடந்த மாதம் 10-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்துவதாக தெரிவித்து இருந்தீா்கள். ஆனால், கூட்டம் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து சுயேச்சை உறுப்பினா்கள் கணேசன், ராஜதுரை ஆகியோா், கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு அரசு வழங்கிய திட்டப் பணிகளுக்கான நிதியில் முறையீடு நடைபெற்றுள்ளதாகவும், தங்கள் வாா்டு பகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினா். தொடா்ந்து இருவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து விவாதங்கள் நடைபெறவில்லை. கூட்டம் தொடங்கிய20 நிமிடங்களில் முடிவடைந்தது.