முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 9:46 PM
பகிர்:

நாசரேத் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி காா்த்திகா குழந்தைகள் நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரத் துறையின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் ஞானராஜ் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் பேசினாா்.

கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசுத் திட்டங்கள், பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் போலீஸாா், பேரூராட்சி ஊழியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், கிராம உதவியாளா் சத்தியசீலன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →