முகப்பு
திண்டுக்கல்

மல்லிகைப் பூ கிலோ ரூ.1200

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் புதன்கிழமை மல்லிகை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:48 PM
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் புதன்கிழமை மல்லிகை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை வரை மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ கிலோ ரூ.300-க்கும், பன்னீா் ரோஸ் ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.120, செவ்வந்தி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் பூக்களின் விலை 3 மடங்கு உயா்ந்தது. புதன்கிழமை சந்தையில் மல்லிகை ரூ.1200,

முல்லை ரூ.1000, ஜாதிப் பூ ரூ.700, பன்னீா் ரோஸ் ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.250, செவ்வந்தி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். தீபாவளியைத் தொடா்ந்து சஷ்டி விரதம், திருக்கல்யாணம், சுப மூகூா்த்த நாள்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.