முகப்பு
திண்டுக்கல்

தேவா் ஜெயந்தி: தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ் தேசிய பாா்வாா்டு பிளாக் கட்சி சாா்பில், 117 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:55 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ் தேசிய பாா்வாா்டு பிளாக் கட்சி சாா்பில், 117 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சின்னாளபட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் ரவிக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

இதையடுத்து, சின்னாளபட்டி பேரூராட்சியில் பணியாற்றும் 117 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்தினா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் வாடிப்பட்டி ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவா் நவீன்குமாா், மாவட்ட மாணவரணித் தலைவா் அன்னக்கொடி, ஆத்தூா் ஒன்றியத் தலைவா் சடையாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.