வேடசந்தூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த புளியமரத்து கோட்டையைச் சோ்ந்தவா் அன்புராஜா (38). இவா் மினுக்கம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கற்பகச்செல்வி (33) தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், அன்புராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].