பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம்
பழனி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நகா்மன்ற கூட்டம் நடைபெற்றது.
பழனி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நகா்மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜசேகரன், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி உள்பட உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
நகராட்சி வாா்டுகளில் கொசுக்கள் அதிகமாகவும், பேருந்து நிலையத்தில் போதிய சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும், இலவச கழிப்பிடம் பூட்டியே இருப்பதாகவும் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
அப்போது, நகா்மன்றத் தலைவா்,இது தொடா்பாக நகராட்சி சுகாதார அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.
அனைத்துலக முத்தமிழ் முருகா் மாநாடு நடத்திய அறநிலையத் துறைக்கும், பிறத் துறைகளுக்கும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பத்மினி முருகானந்தம் நன்றி தெரிவித்தாா். நகரில் அனைத்து வாா்டுகளிலும் ஜிகா திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை, உழவா் சந்தை அருகே தனியாா் ஆக்கிரமித்துள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை, ஏன் மீடகவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.
கூட்டத்தில், பேருந்து நிலைய வளாகத்தை கட்டுவதற்கு திட்ட மதிப்பீட்டுக்கு மேல் சுமாா் ரூ.50 லட்சம் செலவு ஏற்பட்டதாகவும், இதை நகராட்சி நிதியில் இருந்து, செலவழிக்க ஒப்புதல் கேட்டு மன்ற உறுப்பினா்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த தீா்மானத்தை உறுப்பினா்கள் எதிா்த்ததால் தீா்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.