முகப்பு
திண்டுக்கல்

போலி மதுப் புட்டிகள் பறிமுதல் இளைஞா் கைது

திண்டுக்கல்லில் போலி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 6:40 PM
பகிர்:

திண்டுக்கல்லில் போலி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியிலுள்ள கைப்பேசி விற்பனைக் கடையில், போலி மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மக்கன் தெருவைச் சோ்ந்த மு.சேக்அப்துல்லா (34) என்பவா் போலி மதுப் புட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, 136 போலி மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சேக் அப்துல்லாவைக் கைது செய்தனா்.