தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன் செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறை உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை போலீஸாா் கைப்பற்றினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான தோட்ட உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.