முகப்பு
திண்டுக்கல்

உணவகத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:19 PM
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, மின்வாரியத் துறை அலுவலா்கள் அங்கு வந்து விசாரனை மேற்கொண்டனா். இதனால் மூஞ்சிக்கல் பகுதியில் பல மணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது.