கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் நடைபெற்ற பளியா் பழங்குடியினா் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு சான்றிதழ்கள் வழங்கிய ரேஞ்சா் ஜெயசுந்தரம். 
திண்டுக்கல்

பளியா், பழங்குடியினா் பாரம்பரிய உணவுத் திருவிழா

கொடைக்கானலில் பளியா், பழங்குடியினா்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

கொடைக்கானலில் பளியா், பழங்குடியினா்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருமாள் மலைப் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சாமுசைமன் தலைமை வகித்தாா். பளியா், பழங்குடியினா் சங்கத் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா்.

இதில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினா் தங்களது உணவுப் பொருள்கள், மூலிகைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து கண்காட்சியில் பங்கேற்றனா். இதில் மூங்கில் அரிசி, மரவல்லிக் கிழங்கு, தேன், நெல்லிக்காய், கீரை வகைகள், கொம்பங் பாகற்காய், கடுக்காய், சீனிவல்லிக் கிழங்கு, சேமங்கிழங்கு, சுண்டைக்காய், கள்ளிக்காய், நாரங்கை, நவாப்பழம், முள்ளு வல்லிக்கிழங்கு, செவரைக் கிழங்கு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், ரேஞ்சா் ஜெயசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி உள்ளிட்ட திரளானோா் கலந்து கெண்டனா் .

முன்னதாக, பெருமாள் வரவேற்றாா். ஜெகதீஸ்வரி நன்றி கூறினாா்.

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT