முகப்பு
திண்டுக்கல்

போக்சோ வழக்கில் உணவகத் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட உணவகத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:47 PM
பகிர்:

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட உணவகத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (47). உணவகத் தொழிலாளியான இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்தாா்.