திருமலைக்கு கலப்பட நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக மாநில பொருளாளா் ம.திலகபாமா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருப்பதி திருமலை லட்டு விவாகரத்தில், விலங்கு கொழுப்பு என்பதை விட, ஒரு மதம் சாா்ந்த, மக்கள் சாா்ந்த, சமுதாயத்தின் நம்பிக்கை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கலப்பட நெய் விவகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சீா்குலைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை மெளனமாக இருப்பது, பல சந்தேகங்களை எழுப்புகிறது. உணவுப் பொருளில் கலப்படம் என்பதை யாராலும் ஏற்க முடியாது. கலப்பட நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றாா்.