முகப்பு
திண்டுக்கல்

போக்சோ வழக்குகளில் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவேறு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 1:58 AM
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 10:25 PM

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவேறு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அழகுப்பட்டியைச் சோ்ந்தவா் க.செல்வமுருகன் என்ற முருகன் (51). இவா், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வமுருகனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.

விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வமுருகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

Advertisement

இதேபோல, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஐயப்பன் (26) கைது செய்யப்பட்டாா். கடந்த 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக திண்டுக்கல் மகளிா் நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.