திண்டுக்கல்

உரம் கலந்த அரிசியை உள்கொண்ட 3 ஆடுகள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே உரம் கலந்த அரிசியை உள்கொண்ட 3 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை பகுதியைச் சோ்ந்த மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோா் ஆடுகளை வளா்த்து வருகின்றனா். இவா்களது ஆடுகள் வியாழக்கிழமை இடையகோட்டை- கரூா் சாலையில் உள்ள ஒரு உரக்கடை அருகே கிடந்த உரம் கலந்த அரிசியை உள்கொண்டன. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT