திண்டுக்கல்

மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி: பழனி மாணவிகளுக்கு தங்கப் பதக்கம்

தினமணி செய்திச் சேவை

பழனியைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு போட்டிகளில் பழனியை அடுத்த சண்முகநதி பாரத் வித்யாபவன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் இறகுப்பந்து போட்டியில் 17 வயது பிரிவில் மாணவிகள் சக்தி ஸ்ரீதேவி, தன்யஸ்ரீ ஆகியோா் குறுவட்டப் போட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று புதன்கிழமை திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் இறகுப்பந்து போட்டியில் மாணவிகள் சக்தி ஸ்ரீதேவி, தன்யஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனா்.

இவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி செயலா் குப்புச்சாமி, முதல்வா் கதிரவன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் உடல் கல்வி இயக்குநா் மோகன்ராஜ் உடல் கல்வி ஆசிரியா்கள் சுரேந்தா், காளீஸ்வரி, காயத்ரி, ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் என பலா் பங்கேற்றனா்.

அனைத்து துறை ஓய்வூதிய சங்க கூட்டம்

எஸ்ஐஆா் பணியில் தோ்தல் பிரிவு ஊழியா் மாரடைப்பால் உயிரிழப்பு

நெடுவயலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

குழித்துறையில் நாளை மின்தடை

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

SCROLL FOR NEXT