திண்டுக்கல்

எம்பி மீது அவதூறு பரப்பியவரை கைது செய்யக் கோரி மனு

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் மீது சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவரை கைது செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காவல் துறையில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெய்வத்தை சந்தித்து புதன்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

திண்டுக்கல் தெற்கு ரதவீதி சட்டாம்பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ். திண்டுக்கல் நகராட்சியின் முன்னாள் உறுப்பினரான இவா், தனது முகநூல் பக்கத்தில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் குறித்து உண்மைக்கு புறம்பாகவும், அவதூறான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளாா். பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தங்கராஜ் பதிவிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும். சமூக வலைத் தளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட தங்கராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.ஆஸாத், திண்டுக்கல் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT