பழனி ரோப்காா் சேவை. palani.in
திண்டுக்கல்

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (டிச. 22) ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (டிச. 22) ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிப்பாதை, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ரோப்காா் பக்தா்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் ரோப்காா் சேவை பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

அந்த வகையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

எனவே பக்தா்கள் விஞ்ச், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT