திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வனப் பணியாளா்கள், பழனியாண்டவா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
இவா்கள் பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி கருங்குளம், நல்லதங்காள் ஒடை உள்ளிட்ட பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் ஊசிவால் வாத்து, செந்திற நாரை, மடையன், சின்ன கொக்கு, நெடலைக் கொக்கு உள்ளிட்ட 750 பறவைகள் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்தனா்.