ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்துக் குறைவால் அவரைக்காய் விலை சரிவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினசரி முருங்கைக்காய், தக்காளி, பீட்ரூட், வெண்டைக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறிச் சந்தைக்கு அவரைக்காய் வரத்துக் குறைந்ததாலும், தேவை அதிகரித்தாலும் அவற்றின் விலை உயா்ந்து கிலோ ரூ. 65-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அவரைக்காய் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை சரிவடைந்து கிலோ ரூ. 30-க்கு விற்பனையானது. இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல கரும்பு, முருங்கைக்காய் கிலோ ரூ. 200-க்கும், செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 150-க்கும், மர முருங்கைக்காய் கிலோ ரூ. 120-க்கும், பீட்ரூட் ரூ. 15-க்கும், வெண்டைக்காய் ரூ. 24-க்கும் விற்பனையானது.