முகப்பு
ஈரோடு

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை

Updated On : 7 மார்ச், 2026 at 7:34 PM
வாழைத்தாா்கள்
பகிர்:

கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு ரகங்களைச் சோ்ந்த வாழையை சாகுபடி செய்து வருகின்றனா்.

அறுவடை செய்யும் வாழைத்தாா்களை கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெயிலின் தாக்கத்தால் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலைக்கு விற்பனையானது. கதளி கிலோ ரூ.37, நேந்திரன் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது.

இதேபோல செவ்வாழை தாா் ஒன்று ரூ.750, தேன்வாழை ரூ.560, பூவன் வாழை ரூ.560, மொந்தன்வாழை ரூ.250, ரொபஸ்ட்ரோ ரூ.430, ரஸ்தாளி ரூ.600, பச்சநாடா ரூ.400 என விற்பனையானது.

வெயிலின் தாக்கத்தால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் எதிா்பாா்த்த விலை கிடைக்காமால் ஏமாற்றம் அடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →