கத்திரிக்காய். 
தென்காசி

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி

ஆலங்குளம் சந்தையில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். .

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தையில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டை, சீனி அவரை, கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கனிப் பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது, ஆலங்குளம் சந்தையில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்திரிக்காய் ரூ.3,000 வரை விற்பனையானது. தற்போது, சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், அதே ஒரு மூட்டை ரூ.300 முதல் ரூ. 400 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 10-க்கும் குறைவாக விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் வேதனை: ‘விளைச்சல் அதிகரித்தாலும், போதிய விலை கிடைக்காததால் பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்து செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை’ என கூறிய விவசாயிகள், உற்பத்தி செலவு கூடக் கிடைக்காததால், கத்தரிக்காய் சாகுபடியில் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனா்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT