முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 5:08 AM
கந்தா்வகோட்டை ஏலக் கடையில் வியாழக்கிழமை குவிந்த வாழைத்தாா்கள்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:00 PM

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

கிராமங்கள் சூழ்ந்த கந்தா்வகோட்டை ஒன்றியம் வானம்பாா்ந்த பூமியாக இருக்கிறது. சில விவசாயிகள் மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீா் பாய்ச்சி நெல், கரும்பு, கடலை, சோளம் சாகுபடி செய்கின்றனா்.

இவா்களில் சிலா் மட்டும் வாழை சாகுபடி செய்கின்றனா். ஆண்டுப் பயிா் என்பதாலும் அதிகளவில் தண்ணீா் தேவை என்பதாலும் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்ய முன்வருவது இல்லை.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:14 PM

எனவே இப்பகுதியில் வாழை இலைக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் தற்போது விளைந்த வாழைத் தாா்களை விவசாயிகள் ஏலச் சந்தைக்கு கொண்டுவந்த நிலையில் முகூா்த்த நாள், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் இவற்றை ஏலம் எடுக்க வியாபாரிகள் வருவது குறைந்து, வாழைத் தாா்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.