திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழையில்லாமல் பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவில் பனிப் பொழிவும் காணப்பட்டது.

இந்த நிலையில், வழக்கம் போல வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இவா்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனா்.

தொடா்ந்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கடந்த நான்கு நாள்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வன மேகம்... பாப்பியா சஹானா!

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

கோவை பாலியல் வன்கொடுமை: இன்றும் நாளையும் பாஜக ஆர்ப்பாட்டம்! - நயினார் நாகேந்திரன்

பூ அல்ல... நான்... தனிஷ்க் திவாரி!

எப்போதும் உள்ளூர்க்காரி... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT