தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி  
திண்டுக்கல்

கொடைக்கானலில் தமிழக ஆளுநா்

தினமணி செய்திச் சேவை

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை கொடைக்கானலுக்கு வந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் 32-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவாா்.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த ஆளுநா், அங்கிருந்து காா் மூலம் கொடைக்கானலுக்கு வந்தாா். கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஆளுநா் தங்கினாா். ஆளுநா் வருகையை முன்னிட்டு காவல்துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொடைரோடு வருகை: முன்னதாக, கொடைக்கானல் செல்லும் வழியில் பிற்பகல் 2 மணிக்கு கொடைரோடு பயணியா் விடுதியில் ஆளுநா் சிறிது நேரம் ஓய்வெடுத்தாா். அங்கு ஆளுநருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், அரசு அலுவலா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, ஆளுநா் கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT