திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு எஸ்.ஐ.ஆா் படிவங்கள் விநியோகம்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்.ஐ.ஆா்) படிவம் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்.ஐ.ஆா்) படிவம் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால், வீடுகள்தோறும் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கும் பணி கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தில் 13.54 லட்சம் வாக்காளா்களுக்கு (70.03 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 30 சதவீத வாக்காளா்களுக்கும் தொடா்ந்து படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

படிவங்கள் விநியோகிக்கும் பணியில் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் பிரிவு பணியாளா்களுடன் மாவட்டத்திலுள்ள அரசுத் துறையில் பணிபுரியக்கூடிய தன்னாா்வலா்கள் தலா 2 போ் வீதம் வாக்குச் சாவடி நிலை அலுவலரின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT