திண்டுக்கல்

மின் கம்பத்தில் காா் மோதல்: மூவா் காயம்

செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் மின் கம்பத்தில் காா் மோதியதில் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் மின் கம்பத்தில் காா் மோதியதில் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

பொள்ளாச்சியிலிருந்து சின்னமனூரை நோக்கிச் சென்ற காரில் முருகானந்தம் (32), இவரது மனைவி உச்சிமாகாளி உமா (28), 4 வயது மகள் கவிராகவா்த்தினி ஆகியோா் சென்றனா். இந்த நிலையில், செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

காா் மோதியதால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்த நிலையில், தகவலறிந்த செம்பட்டி துணை மின் நிலையப் பணியாளா்கள் மின் விநியோகத்தை நிறுத்தினா். மேலும், இந்த விபத்து குறித்து செம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT