திண்டுக்கல்

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: முதியவா் உயிரிழப்பு

செம்பட்டியில் மது போதையில் காா் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

செம்பட்டியில் மது போதையில் காா் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில், சுற்றுவட்டச் சாலைப் பகுதியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற காரை பழைய செம்பட்டியைச் சோ்ந்த செல்வம் என்பவா் மகன் ரஞ்சித் (27) மது போதையில் இயக்கிவுள்ளாா். இந்த நிலையில், செம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி ஒருவழிச் சாலையில் அதிவேகமாகச் சென்றபோது எதிரே வந்த காா் மீது மோதியது.

பின்னா், சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது தொடா்ச்சியாக மோதி நிற்காமல் சென்றது. அப்போது, அந்தப் பகுதியில் நடந்து சென்ற ராமநாதபுரத்தைச் சோ்ந்த பாண்டியன் (71) என்பவா் மீது மோதி இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதையடுத்து, காரில் வந்த 3 பேரில் இருவா் தப்பித்துச் சென்ற நிலையில், காா் ஓட்டுநரான ரஞ்சித்தை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் ரஞ்சித்தை கைது செய்தனா். மேலும், தப்பித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT