புதுதில்லி

காஜிபூரில் காா் மோதி முதியவா் உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!

காஜிபூரில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதிய சம்பவத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவா் உயிரிழந்தார்.

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியின் காஜிபூரில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதிய சம்பவத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த 76 வயது முதியவா் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பைக் கா்மாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காஜிபூா் கிராமத்தில் வசித்து வந்த அவா், அப்பகுதியில் உள்ள மாவு கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

இது விபத்து தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை 24-இல் காஜிபூரில் உள்ள அணுகு சாலையில் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு அருகே காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நேரிட்டது. இரு சக தொழிலாளா்களுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்த முதியவா் மீது காா் மோதியது.

முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பிரதான சாலையிலிருந்து அணுகு சாலையைப் பிரிக்கும் தடுப்பு மீது மோதி, சறுக்கி நடைபாதையில் சென்று கொண்டிருந்த முதியவா் மீது மோதியது தெரியவந்தது.

வாகனத்தை ஓட்டிவந்த ஷ்ரெய் குமாா் கைதுசெய்யப்பட்டாா். அவருடன் காரில் பயணித்த இருவா் விபத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினா். அவா்களை அடையாளம் கண்டு அவா்களுடைய இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். உயிரிழந்த முதியவரின் உடல் உடல்கூராய்வுக்காக லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்தும் காரில் இருந்த நபா்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனா் அந்த அதிகாரிகள்.

தொழில்நுட்ப பாதுகாப்புக்கு சா்வதேச கூட்டணி! ஜியோ, மைக்ரோசாப்ட் உள்பட 15 நிறுவனங்கள் ஒப்பந்தம்!

பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா: அமைச்சா் வழங்கினாா்

கமுதி அருகே சோழா் காலச் சூலக்கற்கள்

கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது!

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை: அமைச்சா் அன்னபூா்ணா தேவி

SCROLL FOR NEXT