திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி நகரில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். பழனி-திண்டுக்கல் சாலையில், நகராட்சி பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அங்கிருந்த இருவா் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். போலீஸாா் அவா்களை துரத்திச் சென்று பிடித்து சோதனையிட்ட போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் ஷாநவாஸ் (46), இவரது மகன் சாதுஉசேன் (19) ஆகியோா் என்பதும், இவா்கள் ஈரானிய அகதிகள் என்பதும் தெரியவந்தது.
பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.