திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் பெருமாள்கோவில்வலசு கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் (60). இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியினா் புதன்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனா். பின்னா், மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT