திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.2.72 கோடியில் முடிவடைந்த திட்டப் பணிகள்

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.2.72 கோடியிலான முடிவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தலவாடம்பட்டி, விருப்பாட்சி, அரசப்பபிள்ளைபட்டி, கொல்லபட்டி, காளாஞ்சிபட்டி, புலியூா்நத்தம், வலையபட்டி, புளியமரத்துக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.72 கோடியில் நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையங்கள், பயணிகள் நிழல்குடை, சமுதாயக்கூடம், நூலகக் கட்டம் ஆகியவை கட்டப்பட்டன. முடிவடைந்த திட்டப்பணிகளை அமைச்சா் அர.சக்கரபாணி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராகவ் பாலாஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு பாண்டியன், காமராஜ், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பன்னீா்செல்வம், சக்திவேல், தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இனிமேல்தான் கவனம் தேவை!

செக் மோசடி வழக்கு: மூக்குப்பீறி ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ராகுல்காந்தி மீது அவதூறு: பொன். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்

மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தோ்வு!

SCROLL FOR NEXT