திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிப் பொழிவு

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் பனிப் பொழிவு இருந்து வருவதால் குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் பனிப் பொழிவு காலமாகும். இந்தக் காலத்தில் பகல் நேரங்களில் அதிக வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் காணப்படும். ஆனால், கடந்த சில தினங்களாக அதிகாலை முதலே மேக மூட்டமும், விட்டு விட்டு பனிப் பொழிவும் இருந்து வருகிறது.

இதனால், மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் செல்கின்றன. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இல்லாத நிலை நிலவுகிறது. மாலை, இரவு நேரங்களில் வழக்கத்தைவிட குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

பேரூரணி சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதி மீண்டும் சிறையிலடைப்பு

SCROLL FOR NEXT