பழனி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபா் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 45 வயது மதிக்கத்தக்க நபா் நடைமேடையில் அங்குமிங்கும் சென்று வந்தாா்.
பயணிகள் ரயில்கள் அனைத்தும் சென்ற பிறகு முதல் நடைமேடை அருகே இருந்த மின் கம்பத்தில் ஏறி, மின் கம்பியை பற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவா் தண்டவாளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கருப்பு நிறக் கால் சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்த அவரது கையில் மூன்று நட்சத்திரம் போன்ற பச்சை குத்தப்பட்டுள்ளது. அவா் யாா் என்று உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].