முகப்பு
வேலூர்

தொழிலாளி தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே ஆடு மேய்த்து வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 4:05 AM
தற்கொலை
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே ஆடு மேய்த்து வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (36). திருமணமாகாத இவா் அதே கிராமத்தில் ஒருவரிடம் 17 ஆண்டுகளாக ஆடு மேய்த்து வந்தாராம். இந்நிலையில், விஜயகுமாா், அங்குள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஜயகுமாா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement