முகப்பு
விருதுநகர்

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:39 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கருப்பசாமி(30). இவா், கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம்.

இந்த நிலையில், இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Advertisement