கொடைக்கானல் அருகேயுள்ள குருசாமி பள்ளம் பகுதியில் காட்டு மாடு திங்கள்கிழமை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள குருசாமி பள்ளம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாப்பம்மாள் (70). இவா், தனது வீட்டருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் வந்த காட்டு மாடு பாப்பம்மாளைத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டு மாடுகள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், அவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.