கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.  
திண்டுக்கல்

காட்டு மாடுகளால் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உலா வரும் காட்டு மாடுகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருசாமி பள்ளம் பகுதியில் காட்டு மாடுகள் கூட்டமாக உலா வந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

அண்மையில், விவசாயி ஒருவரின் பொதி சுமக்கும் குதிரையை காட்டெருமை தாக்கியது. எனவே, காட்டு மாடுகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாத வகையில், அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை! - கு. செல்வப்பெருந்தகை

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்

SCROLL FOR NEXT