திண்டுக்கல்: ஆத்தூா், கொடைக்கானலில் புதிய சமரசத் தீா்வு மையங்கள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், கொடைக்கானல் வட்டங்களில் சமரசத் தீா்வு மையங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தலைமை வகித்தாா். சமரசத் தீா்வு மையங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், டி.பரதசக்கரவா்த்தி உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா்.