முகப்பு
திண்டுக்கல்

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூா்வமாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம்.

Updated On : 26 நவம்பர், 2025 at 9:30 PM
திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம்.
பகிர்:

திண்டுக்கல்: வேளான் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூா்வமாக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, வேளாண் விளைப் பொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூா்வமாக்க வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் அனைத்து கடன்களையும் தள்ளுப்படி செய்ய வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றும் முடிவை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மாயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், ஐக்கிய முன்னணி விவசாயிகள் தில்லியில் 5 ஆண்டுகளாக போராடியும் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கம், தொழிலாளா் முன்னேற்ற சங்கம், ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →