கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் பி.எல்.செட் பகுதியில் சாய்ந்து விழுந்த மரத்தை அகற்றிய ஊழியா்கள். 
திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மழை குறைந்து வெயிலடித்தது. இதனால், பொது மக்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனா்.

தொடா்ந்து 3 நாள்கள் மழை பெய்ததால், மலைச் சாலைகளில் உள்ள மரங்கள் சாயும் நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் பி.எல்.செட் பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு கொடைக்கானல் வனத் துறையினா் சென்று அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது. மரம் விழுந்ததில் மின் கம்பிகள் சேதமடைந்ததால் அவற்றை சீரமைக்கும் பணியில் மின் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால், பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் ஆபத்தான நிலையில் உள்ள யூக்காலி மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT