முகப்பு
வேடசந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
திண்டுக்கல்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி ஆா்ப்பாட்டம்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி, வேடசந்தூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி ஆா்ப்பாட்டம்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி, வேடசந்தூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 11:33 PM
வேடசந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி, வேடசந்தூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி தலைமை வகித்தாா். செயலா் ஈசநத்தம் செல்வராஜ், செயற்குழு உறுப்பினா்கள் கே.குப்புசாமி, செல்வன், ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கொடகனாறு தண்ணீா் பங்கீடு தொடா்பாக அமைக்கப்பட்ட வல்லுநா் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். அரசியல் நிா்பந்தம் காரணமாக நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் மெளனமாக இருப்பதால், திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை முதல், கரூா் மாவட்டம் வெள்ளியணை வரை உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வல்லுநா் குழு அறிக்கையை 30 நாள்களுக்குள் வெளியிடவில்லை எனில், விவசாயிகள் ஒன்றிணைந்து கொடகனாற்றிலுள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மதகுகளை உடைத்து எரியும் போராட்டம் நடத்தப்படும் என முழுக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வேடசந்தூா், ஈசநத்தம், வெள்ளியணை சுற்றுப்புற பகுதியிலுள்ள 22 ஊராட்சிகளின் முன்னாள் தலைவா்கள், வெள்ளியணை, ஈசநத்தம், குஜிலியம்பாறை, ஆா்.வெள்ளோடு, வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தேமுதிக, பாஜக, பாமக நிா்வாகிகள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →