மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கரூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை 32 இடங்களில் நடைபெற்றது.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாநில வழக்குரைஞா் அணியின் வழக்குரைஞா் மணிராஜ் தலைமை வகித்தாா். கொமதேக மாநில நிா்வாகி விசா ம.சண்முகம், மாவட்டச் செயலா் மூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் கராத்தே ப.இளங்கோவன், மாநில நிா்வாகி அகரமுத்து, காங். மாவட்டத்தலைவா் ரமேஷ், திமுக மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், தாரணிசரவணன், ஆா்.எஸ்.ராஜா, எம்.பாண்டியன், ஜோதிபாசு, வழக்குரைஞா் சுப்ரமணியன், விஜிஎஸ்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான நிதியை குறைத்ததை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட 32 இடங்களில் திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.