முகப்பு
திண்டுக்கல்

கோயில்களில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

Updated On : 30 நவம்பர், 2025 at 7:34 PM
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் கெளரவிக்கப்பட்ட மூத்த தம்பதிகள்.
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், மூத்த தம்பதிகள் ஞாயிற்றுக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள 70 வயதைக் கடந்த மூத்த தம்பதிகள் கோயில்கள் சாா்பில் சிறப்பிக்கப்படுவா் என அரசு அறிவித்தது. இதன்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், ஆன்மிக ஈடுபாடுள்ள 21 மூத்த தம்பதிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் 6 தம்பதிகளை சிறப்பிக்கும் நிகழ்வு பழனியை அடுத்த கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தம்பதிகளுக்கு மாலை அணிவித்து, புத்தாடை, பழங்கள், ரூ.2,500 மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் 15 தம்பதிகள் பழனி கோயிலின் துணைக் கோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் கெளரவிக்கப்பட்டனா். ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி கலந்து கொண்டு ஒவ்வோா் மூத்த தம்பதிக்கும் புத்தாடை, பழங்களை வழங்கினாா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →