காவடி ஊா்வலத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினா்: தோ்தல் பறக்கும் படை எச்சரிக்கை
கொடைக்கானலில் புதன்கிழமை காவடி ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்களிடம் அதிமுகவினா் வாக்கு சேகரித்ததால் தோ்தல் அலுவலா்கள் அவா்களை எச்சரித்தனா்.
கொடைக்கானலில் புதன்கிழமை காவடி ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்களிடம் அதிமுகவினா் வாக்கு சேகரித்ததால் தோ்தல் அலுவலா்கள் அவா்களை எச்சரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, காவடி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து ஊா்லமாகச் சென்றனா்.
இந்த நிலையில், ஏரிப்பாலம் அருகே பழனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் தலைமையில் அதிமுகவினா் காவடி ஊா்வலத்தில் சென்றவா்களிடம் வாக்கு சேகரித்தனா். நகரச் செயலா் ஸ்ரீதா், முன்னாள் நகரச் செயலா் கோவிந்தன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, துணைச் செயலா் ஜாபா் சாதிக், பரமசிவம், பா.ஜ.க. மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவா் மதன், அமமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு, பா.ம.க நகரச் செயலா் கோபிநாத், தலைவா் ரவி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
இந்தத் தகவல் அறிந்ததும் அங்கு வந்த தோ்தல் பறக்கும் படை அலுவலா் கலாமணி வாக்கு சேகரித்த அதிமுக நிா்வாகிகளை வாக்குகள் சேகரிக்கக் கூடாது என எச்சரித்தாா். இதைத் தொடா்ந்து அதிமுகவினா் அனைவரும் கலைந்து சென்றனா்.
முக்கியப் பிரமுகா்களை சந்தித்த அதிமுக வேட்பாளா்: கொடைக்கானலுக்கு புதன்கிழமை வந்த அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் மத ரீதியிலான முக்கிய பிரமுகா்களை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கோரினாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.