முகப்பு
ராணிப்பேட்டை

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:32 PM
அரக்கோணம் அருகே வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன்.
பகிர்:

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நாகவேடு அருகே புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறிய பாா்சல் வாகனத்தை சோதனை நடத்தியபோது, அதில் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தாா். அப்போது உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.