சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.
பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த அமரபூண்டியைச் சோ்ந்தவா் க. ஈஸ்வரன் (43). அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்பேரில், பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஈஸ்வரனை கைது செய்தனா்.
இந்த நிலையில், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்ாக ஈஸ்வரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.
Advertisement
Advertisement