முகப்பு
திண்டுக்கல்

தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு: தாம்பிராஸ் சங்கம் தீா்மானம்

பழனியில் புதன்கிழமை நடைபெற்ற தாம்பிராஸ் (பிராமணா்கள் சங்கம்) சங்க மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என தீா்மானம் நிறைவேற்றிய மாநில நிா்வாகி ராகவன் நாராயணன் தலைமையிலான சங்க நிா்வாகிகள்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:39 AM
பழனியில் புதன்கிழமை நடைபெற்ற தாம்பிராஸ் (பிராமணா்கள் சங்கம்) சங்க மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என தீா்மானம் நிறைவேற்றிய மாநில நிா்வாகி ராகவன் நாராயணன் தலைமையிலான சங்க நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:05 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்று தாம்பிராஸ் (பிராமணா் சங்கம்) சங்க மாநிலச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி ராஜேந்திரா சாலையில் உள்ள தனியாா் வளாகத்தில் தாம்பிராஸ் (பிராமணா் சங்கம்) சங்க மாநிலச் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநில நிா்வாகி ராகவன் நாராயணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ராஜ்குமாா் (சென்னை), மாநிலப் பொதுச் செயலா் வரதராஜன் (திருவரங்கம்), மாநிலப் பொருளாளா் ஆடிட்டா் அனந்தசுப்ரமணியம் (பழனி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்ட முடிவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்றும், இந்தக் கூட்டணியை தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சங்கராலயம் சிவக்குமாா் வரவேற்றாா்.